என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாபர் மசூதி
நீங்கள் தேடியது "பாபர் மசூதி"
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அரசியல் சாசன அமர்வு வரும் 26-ம் தேதி முதல் விசாரணை நடத்த உள்ளது. #AyodhyaCase #SupremeCourt
புதுடெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணை தாமதம் ஆனது.
இந்நிலையில், விடுப்பில் சென்றிருந்த நீதிபதி பாப்டே பணிக்குத் திரும்பியதையடுத்து, அயோத்தி வழக்கு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான புதிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. #AyodhyaCase #SupremeCourt

அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்நிலையில், விடுப்பில் சென்றிருந்த நீதிபதி பாப்டே பணிக்குத் திரும்பியதையடுத்து, அயோத்தி வழக்கு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான புதிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. #AyodhyaCase #SupremeCourt
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உபைதுர் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கமர்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாபர் மசூதி இடிப்பு பற்றியும், அந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பாபர் மசூதி குறித்து பிரதமர் நாட்டுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டிக்கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ள குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் முஸ்லிம்கள் பலர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பக்ருதீன், குளித்தலை நகர செயலாளர் லியாகத்அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமை வகித்தார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத்தலைவர் அபுபக்கர் சித்திக், மக்கள் உரிமை பொது மேடை ஒருங்கிணைப் பாளர் அசன் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில பேச்சாளர் கே.எஸ். சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞரணி மாநில இணைச் செயலாளர் முருகையன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அருள், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காம ராசு, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற சட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும். நீதிக்காக தேசத்தின் அபிமானிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக், செய்தி தொடர்பாளர் அகமது இக்பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாருக் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல்கனி நன்றி கூறினார்.
இதேபோல, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை எதிரே, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் மாவட்டச் செயலாளர் மீரான் மொய்தீன், தமுமுக. மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா, மாவட்ட பொருளாளர் முஹமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தி.மு.க. மாவட்டச்செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது. இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #BabriMasjid #BabriMasjidDemolitionDay
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் வருகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட சிவசேனா மற்றும் விசுவ இந்து அமைப்புகள் தீவிரமாக உள்ளன. இதற்காக சமீபத்தில் அயோத்தியில் தர்மசபை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால் அயோத்தியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.
இதையடுத்து அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய துணை நிலை படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் மட்டுமின்றி பைசலாபாத் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
அயோத்தியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அனைத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. #BabriMasjid #BabriMasjidDemolitionDay

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Babrimasjid
திருச்சி:
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக மக்கள் வரிப்பணம் ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்கி மோடி அரசு வீணடித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது. இந்த சிலைக்கான முதலீட்டை கொண்டு ஏராளமான விவசாய மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். அத்துடன் 2 புதிய ஐ.ஐ.டி.க்கள், 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 5 புதிய ஐ.ஐ.எம். வளாகங்களை அமைத்திருக்க முடியும்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் மொத்தம் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட இருப்பதால் இத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு கொடுப்பதா? என்பதை கள ஆய்வு செய்து முடிவு செய்ய பொதுச்செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்ட வேண்டும், அங்கு சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அப்புறப்படுத்த வேண்டும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #Babrimasjid

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #RamJanmabhoomicase #BabriMasjidcase
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் இந்து மதக் கடவுளான ராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528-ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948-ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது.
1980-களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின.
1989-ல் அலஹாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின. மசூதியை இடித்து விட்டு அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின.
6-12-1992 அன்று கரசேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன.
பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. 1993-ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம் (அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக் போர்டு வாரியத்துக்கா), அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது? போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும் இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ராம ஜன்ம பூமி இயக்கத்துக்கும் (சங் பரிவார் அமைப்பு), ஒரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி நிர்மோஹி அகோரா என்ற இந்து அமைப்பிற்கும் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷ்வ இந்து பரிஷத், மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இரண்டும் அறிவித்தன.
இந்து மகாசபை செய்த மேல் முறையீட்டு மனுவைப் ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட், மே 2011-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் இம்மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு எது? என்று தீர்மானித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என இன்று தெரிவித்துள்ளனர். #RamJanmabhoomicase #BabriMasjidcase

இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு மனுவின் மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் இம்மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு எது? என்று தீர்மானித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என இன்று தெரிவித்துள்ளனர். #RamJanmabhoomicase #BabriMasjidcase
×

X